புத்தகங்கள்

1801: முதல் இந்திய சுதந்திரப் போர் டாக்டர்.மு.ராஜேந்திரன்

சமீபமாக ஒரு பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. குடியரசு தின விழாவில் தமிழ் நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று. அது குறித்து முதலமைச்சர் ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதுகிறார். தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதியில்லை. ஏன் இதை வாசிப்பு தொடர்பான பதிவில் குறிப்பிடுகிறேன் என்றால் நான் வாசித்ததே இதனை குறித்துதான். தமிழக அரசு தனது அலங்கார ஊர்தியில் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சி ஆகியோரை தமிழகத்தின் …

1801: முதல் இந்திய சுதந்திரப் போர் டாக்டர்.மு.ராஜேந்திரன் Read More »

Bengal Nights – Mircea Eliade

மைத்ரேயிதேவி என்றொரு வங்கப் பெண், தாகூரின் சீடர், கவிஞர், சமூக சேவகி, மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு என வாழ்பவர். எல்லாம் சுமூகமாக செல்லும் அவர் வாழ்வில் ஒரு திருப்பம் நிகழ்கிறது. தனது ஐரோப்பிய பயணத்தின்போது, ருமேனியர்கள் தன் பெயரைக் கேட்டதும் நன்கறிந்தவர்கள் போல முக உணர்வை வெளிப்படுத்துவது ஏன் என்று அவருக்கு புரியவில்லை. பின் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வரும் ருமேனிய நண்பர் ஒருவர் அதற்கான காரணத்தை விளங்க வைக்கிறார். 1920-30 களில் மைத்ரேயியின் வீட்டில் …

Bengal Nights – Mircea Eliade Read More »

பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு

மானுடம் என்பதன் அர்த்தம் என்ன? மற்ற உயிர்களிலிருந்து நாம் எதில் வேறுபடுகிறோம்? அன்பு, சக உயிர் மீதான நேசம், சமூகமாக வாழ்தல் போன்ற பதில்கள் வரலாம். அத்தனையும் தவறு. மேற்படி விசயங்களில் நம்மைக் காட்டிலும் சிறப்பாக வாழும் உயிர்கள் உண்டு. மனிதனின் அடையாளம் தீராப்பசிதான். பசி என்றால் வெறும் வயிற்றுப்பசி மட்டுமல்ல. அனைத்து வித பசிகளும்தான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வித பசி. அறிவுப்பசியோடு கடைசி வரை தொடர்ந்து பயில்வோரையும் பார்த்திருப்போம். காமப்பசியோடு கடைசிவரை திருப்தியுறாமல் அலைவோரையும் கண்டிருப்போம். …

பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு Read More »

ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்…

1950 களின் நடுவே… அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா. சிறப்பு விருந்தினராக இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் வந்திருக்கிறார். அவருக்கே அருகே பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி அய்யர். எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்க, திடீரென மேடையின் பின்புறம், மாடியிலிருந்து பைப்பைப் பிடித்து மளமளவென ஒரு கும்பல் கீழே இறங்குகிறது. என்ன, ஏதென்று பார்வையாளர்களுக்குப் புரிவதற்குள் அக்கூட்டம் துணை வேந்தரை சூழந்துக் கொள்கிறது. அவரால் எங்கும் நகர முடியவில்லை. தயாராக வந்த அக்கூட்டம் துணைவேந்தரை செருப்பால் …

ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்… Read More »

சாதி ஒழிப்பு – டாக்டர் அம்பேத்கர்

ஒரு நாள் பகல் வேளையில், நல்ல உணவுக்குப் பின் செய்வதற்கு எந்த வேலையும் இல்லாத பொழுது நண்பர் ஒருவரிடம் எதையாவது பேச வேண்டும் என்பதற்காக பெரிய தேசாபிமானம் கொண்டவனாக என்னை நம்பிக் கொண்டிருந்த நான் “இந்தியாவை பார்த்திங்களா சார்? இவ்வளவு வேற்றுமை இருந்தும் எல்லா மாநிலங்களும் எப்படி ஒருங்கிணைந்து இருக்கு!” என்று ஒரு உரையாடலை துவங்கினேன். பகுத்தறிவும் சுயமரியாதையும் இயல்பிலேயே கொண்டிருந்த அந்த நண்பர் இந்தியாவைக் குறித்த தன் பார்வையை சொல்லத் துவங்கினார். அன்றுதான் எனக்கும் உண்மைகளை …

சாதி ஒழிப்பு – டாக்டர் அம்பேத்கர் Read More »

ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்

“இந்த சிஸ்டம் எவ்வளவு ஆபத்தானதுன்னு அதை எதிர்க்கற வரை உனக்கு புரியாது” விசாரனை என்ற திரைப்படத்தில் இந்த வசனம் வரும். சிஸ்டம் என்று எதை சொல்கிறார்கள்? நம் அரசாங்கம் இயங்கும் முறையைத்தான். அதை யார் இயக்குவது. அதிகாரிகளும் அரசியல்வாதிகளும். அவர்கள் எங்கேயிருந்து வருகிறார்கள். நம்மில் இருந்துதான், நம்மால்தான் உருவாகிறார்கள். ஆனால் நமக்காகவா என்றால் இல்லை. சுஜாதா ஒரு சிறுகதையின் முடிவில் இப்படி குறிப்பிட்டுருப்பார்.”ஓழுங்காதானே ஆரம்பிச்சோம், அப்புறம் எப்படி இப்படி?” இளைஞன் ஒருவன் அரசாங்கத்திற்கு எதிரானவன் என்று சுட்டுக் …

ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் Read More »