ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்…
1950 களின் நடுவே… அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா. சிறப்பு விருந்தினராக இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் வந்திருக்கிறார். அவருக்கே அருகே பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி அய்யர். எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்க, திடீரென மேடையின் பின்புறம், மாடியிலிருந்து பைப்பைப் பிடித்து மளமளவென ஒரு கும்பல் கீழே இறங்குகிறது. என்ன, ஏதென்று பார்வையாளர்களுக்குப் புரிவதற்குள் அக்கூட்டம் துணை வேந்தரை சூழந்துக் கொள்கிறது. அவரால் எங்கும் நகர முடியவில்லை. தயாராக வந்த அக்கூட்டம் துணைவேந்தரை செருப்பால் …